ரோப் கார் விபத்துக்குள்ளான காட்சி வெளியாகியுள்ளது..!
ஜார்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் விபத்து நிகழ்ந்த போது எடுக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 1500 அடி உயர மலையில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் 60 சுற்றுலா பயணிகள் சுமார் 46 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த காட்சியை அதில் பயணித்த நபர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.





