சதீசுடன் சமந்தா எடுத்த புகைப்படம் வைரல்..!
முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முழுமையாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, படப்பிடிப்பில் தங்கியே நடித்து வருகிறாராம். சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து போட்டோஷூட் அல்லது தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா.
அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா, பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.





