--- --:--:-- --

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!

6

சென்னை அருகே ஐ‌ஐ‌டி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி கடந்த 2017ஆம் ஆண்டு உடன் பயின்ற மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

 

அதன் பேரில் கடந்த ஆண்டு முன்னாள் ஆராய்ச்சி மாணவர்கள் 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon