--- --:--:-- --

செல்பி எடுத்த இளைஞர்களை விரட்டிய காட்டு யானைகள்..!

3

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆபத்தை உணராமல் யானையின் அருகே சென்று செல்பி எடுத்த மாணவர்களை காட்டு யானைகள் துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஏழு நாட்களாக நான்கு குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றி வருகிறது. இதை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

இருப்பினும் அது குடியிருப்பு மற்றும் சாலை மார்க்கமாக அதிகம் சுற்றி வருகிறது. இந்நிலையில் குன்னூர் சாலை அருகே வந்த யானைகளை கண்டு இளைஞர்கள் இருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதனை கண்ட 9 காட்டு யானைகளும் ஆக்ரோஷமாக இளைஞர்களை துரத்தியது.

 

இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் யானை சுற்றி வருவது போன்று சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon