ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மக்களுக்கு உற்சாகமூட்ட இசை கச்சேரி..!
உக்ரைன் நாட்டின் ஒடிசா நகர் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்த படி கலைஞர்கள் இசை கச்சேரி நடத்தினர்.
துறைமுக நகரமான ஒடிசாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலால் பதற்றத்துடன் காணப்படும்போது நகரவாசிகளுக்கு உற்சாகமூட்டும் விதமாக கலைஞர்கள் இசை கச்சேரி நடத்துகின்றனர். அங்கிருந்த மக்கள் சில நிமிடங்கள் கவலைகளை மறந்து நடனமாடினார்.





