பதவியை ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ..!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை கோத்தபாய ராஜபக்சேவிடம் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அதிபர் கோத்தபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய அரசியல் நெருக்கடியை காரணம் காட்டி தனது பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்திருக்கிறார்.
இதற்கான கடிதத்தை அதிபர் கோத்தபாயவிடம் அவர் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் இலங்கையில் முழு அமைச்சரவையும் கலைத்துவிட்டு அனைத்து கட்சி கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்ற அழுத்தம் கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பதினொரு கூட்டணி கட்சிகள் அமைச்சரவையை கலைக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





