லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள கிராமத்தில் இருந்து வடக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அளவுகோலில் 4.3 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.






