--- --:--:-- --

மாணவி குறித்து அவதூறு வாட்சப் ஸ்டேட்டஸ்..!

5

தென்காசி அருகே அரசு கல்லூரி மாணவி புகைப்படத்தை குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். கடையம் ஐந்தாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் அதே பகுதியை சேர்ந்த மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் வைத்து சதீஷ் அவதூறுகளை பரப்பினார். இதுகுறித்து தட்டிக்கேட்ட மாணவியின் பெற்றோருக்கு சதீஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி சதீஷ் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது காவல் நிலையத்தில் தெரியவந்தது.

Right Menu Icon