--- --:--:-- --

எலக்ட்ரிக் பைக் வெடித்ததில் தந்தை, மகள் பலி..!

6

வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பகுதியில் உள்ள பலராமன் தெருவை சேர்ந்தவர் துரைவர்மா, புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் ப்ரீத்தி, போளூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். துரைவர்மா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

 

அந்த ப்புதிய பைக்கை இன்று விடியற்காலை வீட்டினுள் நிறுத்தி சார்ஜ் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, பேட்டரி வெடித்து சிதறியது. பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதுடன், தீ அருகில் இருந்த இருசக்கர வாகனங்களுக்கும் பரவியது. அச்சத்தில் வீட்டில் இருந்த கழிவறையில் பதுங்கியிருந்த துரைவர்மா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

 

சம்பவம் குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல்நிலைய போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து அருகில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதிதாக வாங்கப்பட்ட பேட்டரி பைக் 2 நாட்களிலேயே வெடித்து சிதறிய சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon