--- --:--:-- --

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என தகவல்..!

7

சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் 18 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

இன்ஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் இந்த நாட்டின் குவாங்சோ நகரை நோக்கி சென்ற பொழுது மலைகள் நிறைந்த வன பகுதியில் விழுந்து நொறுங்கிய தீப்பிடித்த விபத்தில் சிக்கியது.

 

விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

18 மணி நேர தேடுதலுக்கு பிறகு ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் 132 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என 32 பேர் இருந்த நிலையில் அனைவருமே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Right Menu Icon