பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய மர்மநபர்கள்..!
மதுரையில் பள்ளிக்கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்தி இருக்கும் சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கரிமேடு அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
அங்கு காவலாளி இல்லாததை அறிந்து நேற்று இரவு புகுந்த மர்ம கும்பல் வகுப்பறையில் இருந்த மின்விசிறிகளை சேதப்படுத்திய தோடு பிரஜோக்டர், சிபியு, லேப்டாப், மோடம் உள்ளிட்ட விலை உயர்ந்த உபகரணங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இரவு நேரத்தில் பள்ளியில் இருந்து சத்தம் வந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ராவுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
காவல்துறையில் தலைமையாசிரியர் கொடுத்த புகாரில் கரிமெடு காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக ஆசிரியர்களும் மாணவர்களும் அச்சத்துடனேயே பள்ளிக்கு செல்கின்றனர்.





