ஹிஜாப் வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு..!
ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கர்நாடகாவில் அரசு பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் நிறைவடைந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவி ஷால் போன்ற தமது அடையாளங்களை மாணவ மாணவிகள் பள்ளிக்குள் அணிந்து செல்லக்கூடாது என தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் விசாரணை நிறைவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக வரும் 21ஆம் தேதி வரை பெங்களூருவில் பொது இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட கூடாது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.






