--- --:--:-- --

குடும்பத் தகராறு காரணமாக 9 வயது சிறுமி உயிரிழப்பு..!

5.1

சேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக நடந்த தற்கொலை முயற்சியில் 9 வயது சிறுமி உயிரிழந்தார். சேலம் கொண்டலாம்பட்டி வார்டு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். மாற்றுத்திறனாளியான இவரின் மனைவி ரேவதி.

 

இவர்களுக்கு 13 வயதில் ஜனனி என்ற மகள், 9 வயதில் வேதிகா ஸ்ரீ என்ற மகளும் இருந்தனர். சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையால் விரக்தியடைந்த ரேவதி மற்றும் அவரின் 2 மகள்களும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இவர்களை மீட்டு கொண்டு செல்லும் வழியில் 9 வயது சிறுமி உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon