--- --:--:-- --

புத்தக கண்காட்சியில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற நடிகை..!

3

கொல்கத்தாவில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் திருடிய தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதற்கு தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா சென்றுள்ளார்.

 

அங்கு அவர் பணப்பையை குப்பை தொட்டியில் வீசியதை பார்த்து ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில் அவருடைய பையை சோதனையிட்டபோது பல பர்ஸ்கள் மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

பணப்பையை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அது உங்களுடையதா என மற்றவர்களிடம் கேட்டு அவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களின் பணப்பையை திருடுவதே அவரது வழக்கமான தொழிலாக இருந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon