ஒரே மேடையில் 2 காதலிகளை மணந்த நபர்..!
ஒரே மேடையில் தான் காதலித்த இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் செயல் தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்கர் என்ற மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தான் சந்து.
3 ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தரி என்ற 21 வயதான பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் தன் வாழ்வில் மற்றொரு பெண் வந்துள்ளார். உறவினர் இல்லத் திருமணத்தில் 20 வயதான ஹசீனா என்ற பெண்ணை கடந்த ஆண்டு சந்தித்துள்ளார்.
அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகினார். பிறகு காதலாக மாறியுள்ளது. இருவரையும் காதலித்து வந்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் இரு பெண்களை காதலிப்பது அந்த இரு பெண்களுக்குமே நன்றாகவே தெரியும்.
இரு பெண்களும் வாழ்ந்தால் நாங்கள் சந்து உடன் தான் வாழ்வோம் என்று சொல்ல சந்து தனது இரு காதலியையும் கிராமத்தினர் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





