பேருந்து மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன், மனைவி..!
சென்னை பூந்தமல்லி பஸ் நிலையத்திற்குள் வேகமாக வந்து பேருந்து மோதிய விபத்தில் கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பூந்தமல்லி பஸ் நிலையத்திற்குள் வேகமாக வந்த அரசு பேருந்து ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அந்த வாகனம் பேருந்தில் சிக்கியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





