உக்ரேன் உடனான பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் : ரஷ்ய அதிபர்
உக்ரேன் உடனான பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். இருநாட்டு போர் தொடர்பாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அண்டை நாடான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் உடன் புதின் ஆலோசனை நடத்தினார்.
அப்பொழுது உக்ரைன் உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக புதின் தெரிவித்தார். பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய பிரதிநிதிகள் தம்மிடம் இவ்வாறு கூறியதாக புதின் கூறினார். ரஷ்ய அதிபர் புதின் கருத்து உலக நாடுகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் இணைய விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். இதனை சுட்டிக் காட்டிய பேச்சுவார்த்தையில் புதிய மாற்றம் என ரஷ்ய அதிபர் புதின் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.






