--- --:--:-- --

சர்வதேச விமான சேவைக்கு அனுமதி..!

6

மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரொனா பரவலை அடுத்து சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கொரொனா மற்றும் ஓமிக்ரான் இணைந்து பரவியதால் இந்தியாவில் சர்வதேச விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

 

இந்நிலையில் தற்பொழுது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. வருகிற மார்ச் 27-ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon