காணாமல் போன இளைஞர் உயிரிழப்பா..?
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர் கொன்று புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை இன்று தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நாகர்கோவில் நேசமணி நகரை சேர்ந்த இளைஞரை காணவில்லை என அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் இளைஞரின் செல்போனை போலீசார் பின் தொடர்ந்துள்ளனர்.
அப்பகுதி நெல்லை மாவட்டம் கடையம் அருகே இளைஞர் இருப்பது தெரியவந்ததை அடுத்து அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு இடத்தில் ஈக்கள் மொய்த்து அதிகமாக துர்நாற்றம் வீசியது என சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இடத்தில் யாரையும் கொன்று புதைத்து இருக்கக் கூடும் என சந்தேகம் அடைந்தனர்.





