கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்..!
சென்னையில் கவன குறைவால் நிகழ்ந்த விபத்தில் அடுத்தடுத்த இரு சக்கர வாகனத்தில் விழுந்ததில் சிறுவன் உட்பட 3 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சிறுவனுடன் சென்ற பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பின்னால் வந்த வாகனத்தை கவனிக்காமல் கவனக் குறைவுடன் அவர் சாலையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவனக்குறைவால் நிகழ்ந்த இந்த விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் சிக்கி படுகாயமடைந்தது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





