வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி நலங்கு வைத்த குடும்பம்..!
தனது செல்லமான வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய புதுச்சேரி குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அழைத்து நலங்கு செய்து அழகு பார்த்தனர். புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த சித்ரா என்பவர் பப்பி என்ற வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்துள்ளார்.
ஒரு அங்கமாக வளர்ந்து வரும் நாய்க்கு தேவையான சாதனங்கள் கொடுத்து பராமரிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நாய் கருவுற்றதும் வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். தன் பெண்ணுக்கு செய்வது போல் அனைத்தையும் செய்துள்ளனர். நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து அழகு பார்த்தனர்.





