--- --:--:-- --

பங்குச்சந்தையில் பெருந்தொகையை இழந்ததால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை..!

5

ங்குச்சந்தையில் பெருமளவு பணத்தை இழந்ததால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் இருந்துள்ளார்.

 

பங்கு சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்த நிலையில் திடீரென சரிவு ஏற்பட்டதால் அவர் அதிக அளவில் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த நாகராஜ் அவரது மனைவியும் தங்களது குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டனர்.

 

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அவர்களது உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon