--- --:--:-- --

மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல..!

6

ஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான தேசிய குழந்தைகள் நல ஆணைய விசாரணை அறிக்கையில் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் என்று உறுதிப்படுத்தப்படவில்லை என அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மதமாற்றத்திற்கு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

 

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குழந்தைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அது தொடர்பான அறிக்கை தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

அதில் மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் காரணமல்ல என விசாரணை அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. தஞ்சையில் சம்பந்தப்பட்ட பள்ளி விடுதியில் தங்கியுள்ள அனைத்து குழந்தைகளையும் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற பரிந்துரைத்துள்ளார்.

 

மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு மனநல ஆலோசனை மற்றும் நிவாரணம் வழங்கவும் தலைமை செயலருக்கு பரிந்துரைத்துள்ளது.

 

உரிய பதிவு எழுதாமல் செயல்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழகம் முழுவதும் இதே போன்று எத்தனை பள்ளி விடுதிகள் செயல்படுகிறது என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை செயலாளருக்கு பரிந்துரைத்துள்ளது.

 

Right Menu Icon