பைக்குகளில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதும் காட்சி..!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விழும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
நேதாஜி நகர் பகுதியில் இரண்டு சக்கர வாகனங்களில் வேகமாக வந்த நான்கு இளைஞர்கள் சாலையோரம் உள்ள போர்டின் மீது மோதி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் இளைஞர்களுக்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





