தமிழகம், புதுச்சேரியில் 4ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வரும் 4ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை 3ஆம் தேதி நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை , அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





