திருமண வதந்தி பற்றி வாய்திறந்த ராஷ்மிகா ..!
நடிகைகள் ஒரே நடிகர் உடன் தொடர்ந்து படங்களில் நடித்தால் அவர்கள் பற்றி காதல் கிசு கிசு வருவதெல்லம் சினிமா துறையில் சகஜம். அப்படி விஜய் தேவரகொண்டா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வருபவர் ராஷ்மிகா.
அவர்கள் காதலித்து வருவதாக தொடர்ந்து பல முறை செய்திகள் வந்தாலும் அவர்கள் அதை. ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் இந்த வருடம் திருமணம் செய்ய போகிறார்கள் என்று கூட கடந்த வாரம் செய்தி வந்தது. இந்த வதந்தி பற்றி ராஷ்மிகா ஒரு தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
“அது டைம் பாஸ் வதந்தி. என் திருமணத்திற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. நேரம் வரும்போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன்” என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.






