--- --:--:-- --

மலை இடுக்கில் 2 நாட்களாக சிக்கியுள்ள இளைஞர்..!

2

கேரள மாநிலம் ஆலப்புழாவில் செங்குத்தான மலை இடுக்கில் இரண்டு நாட்களாக சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவத்தின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது.

 

பாபு என்பவர் தன் நண்பர்களுடன் கடந்த திங்கள்கிழமை மலையேற்றத்தில் ஈடுபட்டதாகவும் இடையில் கால் தவறி மலையிலிருந்து உருண்டு விழுந்து இடுக்கில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இளைஞர் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தன.

 

ஹெலிகாப்டர் மூலம் இளைஞரை மீட்க கடலோர காவல்படை வீரர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகால்களில் காயங்களுடன் மலையிடையில் சிக்கியுள்ளவரை மீட்க இந்திய ராணுவத்தின் உதவியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நாடியுள்ளார்.

Right Menu Icon