சாகசம் என்ற பெயரில் உயிருக்கு உலை..!
உறைந்து கெட்டியிருக்கும் ஏரிக்குள் கடும் குளிர் நீரில் நீச்சல் சாகசம் செய்ய முயன்றவர் வெளியே வர முடியாமல் தவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
போரிஸ் என்பவர் தான் நீச்சல் சாகசம் செய்து பதற்றத்துக்கு உள்ளான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உறைந்திருக்கும் ஏரியின் ஒரு பகுதியில் உள்ள குளிர்ந்த நீரில் சாகசம் செய்த ஒருவர் தனது சகாக்கள் உதவியுடன் கயிறு கட்டிக்கொண்டு ஏரிக்குள் மூழ்கி சென்றார்.
வெளியேறும் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது பாதை மாறி விடுகிறார். சகாக்கள் வெளியேறும் வழியை கூறியும் அதனை சரிவர கவனிக்காமல் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மீண்டும் புறப்பட்ட வழியிலேயே நீருக்கு மேலே வந்துள்ளார். அப்பொழுது அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.





