--- --:--:-- --

சிறுமியை இடிக்க இருந்த கார்…சிறுமியை தள்ளிவிட்டு காரில் அடிபட்டு விழுந்த பெண் காவலர்..!

7

மெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் சைகையை மீறி வேகமாக வந்த கார் சாலையை கடந்து வந்த பள்ளி சிறுமி மீது மோத இருந்த நிலையில் அவரை தள்ளி விட்டு காரில் அடிபட்டு விழுந்த போக்குவரத்து பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

கடந்த 4ஆம் தேதி அன்று நிகழ்ந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பெண் காவலர் கவுண்டி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சாலையின் ஒரு புறத்தில் வந்த வாகனங்களை கைகாட்டி நிறுத்தச் சொல்லிவிட்டு எதிர்ப்புறத்தில் இருந்து சாலையை கடக்க காத்துநின்ற பள்ளி சிறுமியை கடந்து வருமாறு கூறினார்.

 

ஆனால் அந்த சிறுமி சாலையை கடந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சைகையை மீறி வேகமாக வந்து குழந்தையின் மீது இடிக்க இருந்ததை நொடிப்பொழுதில் சுதாரித்து அந்த காவலர் அந்த சிறுமியை வேகமாக தள்ளிவிட்டு தான் அடிபட்டு விழுந்தார்.

 

தான் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Right Menu Icon