நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு அபராத தொகையை குறைக்க நீதிமன்றம் யோசனை..!
5ஜி சேவையை அமல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை பொது சேவை என்ற நிபந்தனையுடன் இரண்டு லட்சமாக குறைக்க உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
நாட்டில் 5ஜி சேவையை அமல்படுத்த தடை விதிக்க கோரி ஜூஹி சாவ்லா தாக்கல் செய்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் சிவில் வழக்கை தொடர்ந்து சட்ட நடைமுறைகளை தவறாக பயன்படுத்தியதற்காக அவருக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதையடுத்து ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அபராத தொகையை 2 லட்சமாக குறைக்கலாம் எனவும், அதற்கு பதில் சூகி சாவ்லா பொதுமக்கள் மத்தியில் புகழ் பெற்றவராக இருந்தால் அவரது புகழை பொது சேவைக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சல்மான் இது தொடர்பாக அவரிடம் ஆலோசனை பெற்று தெரிவிக்கப்படும் என கூறினார்.





