--- --:--:-- --

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய்..!

3

கோவாவில் வரும் பிப்ரவரி 14ஆம் நாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கோவாவில் பல்வேறு கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அந்தக் கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார்.

 

அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களில் நில உரிமையை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

டெல்லியை போலவே கோவாவின் ஒரு கிராமம், மாவட்டத்தை சேர்ந்தவர்களின் இலவச சுகாதாரத்திற்காக முஹல்லா கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் திறக்கப்படும் எனவும் விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிறகு விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றால் கோவா மக்களுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்துள்ளது.

 

Right Menu Icon