பிரதமருக்கு அதிருப்தி தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி..!
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வாகவில்லை. இதற்கு மேற்குவங்கம், கேரளா அரசுகள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
டெல்லியில் நடத்தப்படும் விழாவில் பல்வேறு மாநிலங்களின் சிறப்பம்சங்களை பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறும். இந்த ஆண்டு மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மட்டுமே மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
மேற்குவங்க அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படாதற்கு கருத்து தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அது பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் நாட்டுக்கு சேவையாற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நோபல் பரிசுபெற்ற ரவீந்திரநாத் தாகூர் சிறப்பு அம்சத்துடன் தாங்கள் அலங்கார ஊர்தி வடிவமைத்து இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.






