--- --:--:-- --

24 மணி நேரத்தில் 2,64,000 பேருக்கு கொரோனா..!

9

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 202 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 65 லட்சத்து 82 ஆயிரத்து 729 ஆக அதிகரித்துள்ளது.

 

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 545 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon