--- --:--:-- --

மீன் லோடு ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

8

ந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடைபள்ளி பகுதியில் மீன் ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து நாராயணபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் தொழிலாளர்கள் என மொத்தம் 14 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

 

இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்த நிலையில் அந்த பகுதி மக்களும் போலீசாரும் 10 பேர் படுகாயங்களுடன் மீட்டனர். ஓட்டுனரின் கவனக் குறைவால் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon