--- --:--:-- --

குட்டி பாம்பை விழுங்கிய நல்ல பாம்பு..!

3

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த குட்டி பாம்பை நல்ல பாம்பு ஒன்று விழுங்கி கொண்டிருந்த பொழுது அவற்றை மீட்ட தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று குட்டி பாம்பை விழுங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் குட்டிப் பாம்பை நல்ல பாம்பிடமிருந்து மீட்டு உள்ளனர்.

 

ஆனால் குட்டி பாம்பு இறந்து விட்டதால் நல்ல பாம்பை ஆத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பாம்பை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அவற்றை காப்பு காட்டில் பத்திரமாக கொண்டு விட்டனர்.

 

Right Menu Icon