10 கரும்பு வாங்கினால் 1 ஜிபி டேட்டா இலவசம்..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 10 கருப்பு வாங்கினால் ஒரு ஜிபி இன்டர்நெட் டேட்டா இலவசம் என்ற போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் கரும்பு வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கடன் வாங்கினால் ஒரு ஜிபி டேட்டா கார்டு இலவசம் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அப்பகுதியில் உள்ளவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.





