மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்..!
விருதுநகரில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியுடன் சண்டை ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். என்ஜிஓ காலனியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சம்பவத்தன்று கோபத்தின் உச்சிக்குச் சென்ற கணவன் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
அதன்பின் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






