இரவு 10 மணி வரை தடுப்பூசி செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்கலாம்..!
இந்தியாவில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை தேவைப்பட்டால் இரவு 10 மணி வரை நீடிக்கலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அறுபது வயதைக் கடந்தவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே 18 வயதைக் கடந்தவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதால் அதிக அளவு கூட்டம் உள்ளது. மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் உட்கட்டமைப்பு வசதி அடிப்படையில் இரவு 10 மணி வரை கூட தடுப்பூசியை செலுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






