--- --:--:-- --

உறவினர் வீட்டில் 70 ரூபாய் திருடியதாக தாய் கொடுத்த கொடூர தண்டணையால் சிறுமி உயிரிழப்பு..!

6

பெரம்பலூரில் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் சூட்டுக் காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தாயும், உறவினரும் சேர்ந்து சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

 

உறவினர் வீட்டில் இருந்து 70 ரூபாயை எடுத்து உணவு பண்டங்கள் வாங்கியதாகவும் அதை கண்டிக்கும் விதமாக தாயாருடன் சேர்ந்து உறவினர் சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது கடந்த ஆறாம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில் காயங்களுடன் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு முதலில் மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி சிகிச்சை அளித்ததாக சொல்லப்படுகிறது.

 

உடல்நிலை மோசமடைந்ததையடுத்து சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை சந்தேக மரணமாக பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon