--- --:--:-- --

கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கம்..!

4

த்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெற இருப்பது இருப்பதால் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கொரொனா தடுப்பூசிகளாக கோவிஷீல்டு, கோவாக்ஸின் உள்ளிட்டவை மக்களுக்கு செலுத்தப்படுகிறது. இவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விபரங்கள் ஆதார் பதிவுடன் கோவின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும்.

 

பிடிஎஃப் பார்மெட்டில் இருக்கும் இந்த சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் 5 மாநில தேர்தலையொட்டி இந்த சான்றிதழில் இருந்த மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மற்ற மாநிலங்களில் அளிக்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றிருக்கும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon