மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று முதல் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெரிசல் நேரங்களில் ஐந்து நிமிட இடைவெளியில் மற்ற நிமிடங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.





