--- --:--:-- --

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் 20,000 ரூபாய் வழங்கப்படும்..!

1

பஞ்சாபில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள கிழக்கு மாநிலங்களில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பல வாக்குறுதிகளை அறிவிக்கின்றனர்.

 

அந்த வகையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித் தொகை, ஆண்டுக்கு 8 சமையல் எரிவாயு உருளைகள் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

 

பெண் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் ஐந்தாயிரம் ரூபாய், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் 15 ஆயிரம் ரூபாய், 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். கல்லூரிக்கு செல்லும் மாணவியருக்கு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon