ஆங்கில புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் ஓமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
கொரொனா தாக்குதலில் தமிழ்நாடு தவித்த நேரத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்று அதனை திறம்பட கட்டுப்படுத்தி இருப்பதாகவும் ஓமிக்ரானை கட்டுப்படுத்துவதிலும் தொண்டர்கள் ஒத்துழைப்பையும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்நோக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று தன்னை சந்திப்பதற்காக நேரில் வருவதை கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்வதாக கூறுகின்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.





