--- --:--:-- --

துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் கவலைக்கிடம்..!

2

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கவலைக்கிடமாக உள்ளார். போலீசாரின் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேற்று இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

 

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தலையில் இருந்து குண்டு அகற்றப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

 

சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon