--- --:--:-- --

தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

6

நாடு முழுக்க கொரொனா தொற்று மிக அதிக வேகத்தில் பரவி வருவதை அடுத்து தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட மத்திய சுகாதாரத்துறைசெயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். தொற்று பாதிப்பு குறித்து எடுக்கப்படும் அனைத்து மாதிரிகளையும் மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பி ஓமிக்ரான் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

 

ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும் என்றும் சுகாதார உள்கட்டமைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நோய்தொற்று அதிகரித்து வரும் வேளையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Right Menu Icon