பிறந்த 5 நாட்களே ஆன குழந்தையை வீட்டுக்கு பின் புதைத்த பெற்றோர்..!
மதுரை உசிலம்பட்டியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துப்பாண்டி, கவுசல்யா தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 21 ஆம் தேதி மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் 26 ஆம் தேதி உடல்நலக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டிற்கு பின்பு வைத்து எரித்ததாக கூறப்படும் நிலையில் குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக விஏஓ அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்த போது முத்துப்பாண்டி கவுசல்யா தம்பதி வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
முத்துப்பாண்டி கொத்தனார் வேலை பார்த்து வரும் நிலையில் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் மூன்றாவதாக பிறந்த குழந்தையை அவர்களை கொலை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





