--- --:--:-- --

கூடுதல் தடுப்பூசிக்கு மருத்துவச்சான்று கட்டாயமல்ல..!

6

பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்த மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் இதனை தெரிவித்தார்.

 

இந்தியாவில் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன் களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் ஏழை நோயாளிகளுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் இணை நோய்கள் இருப்பவர்கள் அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தவறான தகவல்கள் பரவி இருப்பதாகவும் மத்திய அரசு அப்படி அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

 

இணை நோயாளிகள் தங்கள் மருத்துவரிடம் சுயமாக ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள மட்டுமே அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசிகளை செலுத்த மருத்துவரிடமிருந்து சான்றிதழ் எதுவும் தேவையில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon