பார்வதி அம்மாள் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் வழங்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்..!
ராசா கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக 5 லட்சம் ரூபாயுடன் சேர்த்து மேலும் 3 லட்சம் வழங்க இருப்பதாக நடிகை ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெய்பீம் படத்தின் உண்மை கதை நாயகனான ராசாவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு அரசு சார்பில் வீடு கட்டித் தர இருப்பதாக முதலமைச்சர் அறிவித்ததை மேற்கோள் காட்டியுள்ளார். இதனால் வீடு கட்ட தான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் ரூபாய் சேர்த்து வழங்குவதாக குறிப்பிட்டார்.





