--- --:--:-- --

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள்..!

8

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, காமராஜ் உள்ளிட்ட 4 பேரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

 

இந்த நிலையில் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அவர்கள் கேரளா, கொடைக்கானல் மற்றும் கோவை பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். அங்கு ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் ஒரு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

 

Right Menu Icon