--- --:--:-- --

ஹெலிகாப்டர் விபத்து : சிகிச்சை பலனின்றி வருண் சிங் உயிரிழப்பு..!

9

பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சையில் இருந்த வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விமானி வருண் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

தன்னலமற்ற சேவையை இந்திய திருநாடு ஒருபோதும் மறவாது எனவும் பதிவிட்டுள்ளார். கடந்த 8ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளில் ஒருவரான வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.

 

குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வருண் சிங் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் பெங்களூர் விமானப்படை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சையில் இருந்த  குருப் கேப்டன் வருண்சிங்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Right Menu Icon